உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2)
சேனைகளின் கர்த்தராகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும் (2)

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே – 2

1. ஒருவராய் சாவாமையுள்ளவர் இவர்
சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2)
அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2)

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே – 2

2. ஆதியும் அந்தமுமானவர் இவர்
அல்பாவும் ஒமேகாவுமானவர் இவர் (2)
இருந்தவரும் இருப்பவரும்
சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2)

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே – 2

3. எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2)
துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2)

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே – 2

1 thought on “உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும்”

  1. Really you have done a great thing. I also request you to include important prayers in latest formats.
    Z.Michaelraj
    Sivakasi,
    Tamil nadu.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top