ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே..

அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே
அம்மா-உன் அருட்கரங்கள் உலகை
அணைக்கத் துடிப்பது போல்
உன் திருக்கொடி தான் வானில்
எழில்ச்சி கண்டிடவே பறக்குதம்மா
திசை எல்லாம் மக்களை வருக வருக
என அழைக்குதம்மா…

ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே உன்
திருக்கொடி வானில் பறக்குதம்மா -2
கோலவிழாவின் சிறப்பினைக் கூறி
அசைந்தாடி மக்களை அழைக்குதம்மா (ஞாலத்தைப்)

தன்னையே உலகிற்குத் தந்திட்ட
தேவனின் தாயே உந்தன் நிழல் தேடி -2
அன்னையே ஆரோக்கிய மாதாவே உம்மை
அண்டியே வந்தவர்கள் பலகோடி -2
வையத்து மாந்தர்கள் துயரம் தீர்த்திட
உற்றவள் நீயல்லவா -2
அய்யன் இயேசுவை திருவயிற்றில் சுமந்து
பெற்றவள் நீயல்லவா பெற்றவள் நீயல்லவா(ஞாலத்தைப்)

ஆழியின் கரையோரம் அமர்ந்தவளே -2
அம்மா அருள் மழை பொழிந்திட தெரிந்தவளே

ஊழிநாள் வரை உன் நாமமே வாழி…
ஊழிநாள் வரை உன் நாமமே வாழி
வேளைமா நகர்வாழ் மரியே வாழி!…
மரியே வாழி….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *