ஆண்டவரே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே இரக்கமாயிரும் ஆண்டவரே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும் Read More »
ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே இரக்கமாயிரும் ஆண்டவரே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும் Read More »
தாவீதின் குலமலரே – ஒளி தாங்கிடும் அகல்விளக்கே – எமைக் காத்திடும் ஆரணங்கே – அருள் சுரந்திடும் தேன்சுனையே 1. இறைவனே முதலில் உனைத் தெரிந்தார் கறை சிறிதில்லாக் காத்திருந்தார் மறையவர் புகழும் மாமணியே கரை சேர்ப்பதுவே உன் பணியே 2. மக்களின் மனமே மகிழ்ந்திடவே நற்கனி சுதனை எமக்களித்தாய் கற்றவர் மற்றவர் யாவருமே பொற்பதம் சேர்த்திட வேண்டுமம்மா
மாசில்லாக் கன்னியே மாதாவே உன்மேல் நேசமில்லாதவர் நீசரேயாவார் வாழ்க வாழ்க வாழ்க மரியே 1. மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய் ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய் 2. தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ நேசம் வைத்தாள்வது நின் கடனாமே
மாசில்லாக் கன்னியே மாதாவே உன்மேல் Read More »
இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள் நிதம் துணை சேர்ப்பாயே – 2 ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் – அன்னை தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் – 2 மாறாத கொடுமை நீங்காத வறுமை தானாக என்றுமே மாற்றிடுவாள் – 2 கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி உள்ளம் திறந்து சொல் உன் கதையை – 2 வெள்ளம் போல அருள் கருணை பாய்ந்திட தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் – 2
இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா Read More »
அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே பெண்களிலே நீர் பேறுபெற்றீர் உம் மகனும் வாழியவே (2) 1. பரிசுத்த மரியாயே எங்கள் பரமனின் தாயாரே பாவிகள் எங்களுக்காய் பரமனை மன்றாடும் (2) இப்போதும் நீர் மன்றாடும் எப்போதும் நீர் மன்றாடும் (2) தீமைகள் நெருங்குகையிலே எம்மைத் தாங்குமம்மா 2. அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே பெண்களிலே நீர் பேறுபெற்றீர் உம் மகனும் வாழியவே மகனும் வாழியவே – 3
அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே Read More »
மாதாவே துணை நீரே உம்மை வாழ்த்திப் போற்ற வரம் தாரும் ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா ஏற்றன்பாக எமைப்பாரும் (2) 1. வானோர் தம்அரசே தாயே எம் மன்றாட்டை தயவாய்க் கேளும் ஈனோர் என்றெம்மை நீர் தள்ளாமல் எக்காலத்துமே தற்காரும் 2. ஒன்றே கேட்டிடுவோம் தாயேயாம் ஓர் சாவான பாவந்தானும் என்றேனும் செய்திடாமல் காத்து எம்மை சுத்தர்களாய்ப் பேணும்
மாதாவே துணை நீரே உம்மை Read More »
சதா சகாய மாதா சத்திய தெய்வத் தாயே நின் மக்கள் எங்களுக்காய் மன்றாட வேண்டுமம்மா (2) 1. துன்பத்தில் வாடும் மக்கள் ஆயிரம் ஆயிரமாய் – 2 கண்ணீர் கணவாய் நின்று உம்மை யாம் கெஞ்சுகிறோம் 2. இதோ உன் அன்னை என்று என் மீட்பர் இயேசு சொன்னார் – 2 இம்மையில் எம்மைத் தேற்ற உன்னையன்றி யாரம்மா
சதா சகாய மாதா சத்திய தெய்வத் தாயே Read More »
என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப்போற்றிடுதே என் மீட்பராம் கடவுளையே நினைந்து மகிழ்கின்றதே தாழ்நிலை நின்ற தம் அடிமைதனை கடைக்கண் நோக்கி உயர்த்திவிட்டார் தலைமுறை யாவும் இனியென்னை பேறுடையாள் எனப் போற்ற வைத்தார் 1. வல்லமை மிக்கவர் என்றுமே நல்லவர் அரும் பெரும் செயல் புரிந்தார் அவருக்கு அஞ்சும் எளியவர் நெஞ்சம் இரக்கத்தை ஊட்டுகிறார் இதயத்தில் செருக்குற்ற கல்மனத்தோரை விரட்டியே அழித்திடுவார் அரியணை மீது அமர்ந்திடுவோரை அகற்றிடச் செய்திடுவார் (2) 2. தாழ்நிலை நின்றவர் உயர்வினை அடைவர் பசித்தோர்
என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப்போற்றிடுதே Read More »
இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா உள்ளமும் துள்ளுதம்மா – உந்தன் தாய்மையின் நினைவாலே அம்மா 1. தாயெனும் போதினிலே மனம் தானுன்னைத் தேடுதம்மா – 2 ஈன்ற தாயும் போற்றும் உந்தன் பாதம் பணிந்திடுவேன் அம்மா 2. வாழ்வெனும் பாதையிலே ஒளி விளக்காய் நீ இருப்பாய் – 2 உண்மை மனதும் உயர்ந்த நெறியும் நிறைந்து வாழ்ந்திடுவேன் அம்மா
இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா Read More »
அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே அம்மா-உன் அருட்கரங்கள் உலகை அணைக்கத் துடிப்பது போல் உன் திருக்கொடி தான் வானில் எழில்ச்சி கண்டிடவே பறக்குதம்மா திசை எல்லாம் மக்களை வருக வருக என அழைக்குதம்மா… ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே உன் திருக்கொடி வானில் பறக்குதம்மா -2 கோலவிழாவின் சிறப்பினைக் கூறி அசைந்தாடி மக்களை அழைக்குதம்மா (ஞாலத்தைப்) தன்னையே உலகிற்குத் தந்திட்ட தேவனின் தாயே உந்தன் நிழல் தேடி -2 அன்னையே ஆரோக்கிய மாதாவே உம்மை அண்டியே வந்தவர்கள்
ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே.. Read More »